செய்திகள்
நகை பறிப்பு

ஆவடி-அம்பத்தூர் பகுதியில் 3 பேரிடம் தங்கசங்கிலி, செல்போன், பணம் பறிப்பு

Published On 2019-08-19 09:38 GMT   |   Update On 2019-08-19 09:38 GMT
ஆவடி-அம்பத்தூர் பகுதியில் 3 பேரிடம் தங்கசங்கிலி, செல்போன், பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநின்றவூர்:

அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணி புரிபவர் பாஸ்கர்.

இன்று அதிகாலை அயப்பாக்கத்தில் பாஸ்கர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கும்பல் பாஸ்கரிடம் இருந்து 2 பவுன் தங்க சங்கிலி, செல்போன், 2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கத்தியை காட்டி பறித்து சென்றது.

இதுபோல் அம்பத்தூர் சி.டி.எஸ். காலனியில் மற்றொரு அரசு பஸ் கண்டக்டர் கமலக் கண்ணன் என்பவரிடம் கத்தியை காட்டி தங்க சங்கிலி, செல்போன் ஆயிரம் ரூபாய் ஆகியவை பறிக்கப்பட்டது. இதை தடுக்க முயன்ற கமலக்கண்ணனுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது.

ஆவடி கோணம்பாளையம் பகுதியில் ரமேஷ் என்பவர் அதிகாலையில், வீடு பால் காய்ப்புக்காக பால் வாங்கி சென்றார். அப்போது வழிப்பறி கும்பலை சேர்ந்தவர்கள் கத்தியை காட்டி 3 பவுன் தங்க சங்கிலி, செல்போன் ரூ. 2 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

ஆவடி, அம்பத்தூர் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். அதிகாலை 3 மணி முதல் 4.30 மணி வரை இந்த வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த பகுதியில் 4 சி.சி.டி.வி. கேமிராக்கள் உள்ளன.

ஆனால் அவை 3 மாதங்களாக செயல்பட வில்லை. எனவே வழிப்பறி கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News