செய்திகள்
பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் ஒரு மாணவிக்கு பரிசு வழங்கிய காட்சி

கல்வி நிறுவனங்களில் சுதந்திர தினவிழா

Published On 2019-08-17 18:15 GMT   |   Update On 2019-08-17 18:15 GMT
கல்வி நிறுவனங்களில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
நொய்யல்:

நாமக்கல் மாவட்டம், பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் உஷாகுமாரி வரவேற்று பேசினார். தொடர்ந்து நமது கலாசாரத்தையும், தேசப்பற்றையும் பறைசாற்றும் விதமாக மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி கள் நடந்தது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் துணைத்தலைவர் ராஜேந்திரன், துணைச்செயலாளர் தமிழ்செல்விதங்கராசு, இயக்குனர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலம் ஆர்.என். ஆக்ஸ்போர்டு பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் ஆர்.என். ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி தலைவர் சண்முகம், ஆர்.என். ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சி.பி.எஸ்.இ) பள்ளியில் செயலாளர் ராஜா, ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கிட்ஸ் பள்ளியில் தாளாளர் சக்திவேல் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து நாட்டுப்பற்றை தெரிவிக்கும் வகையில் மெட்ரிக், பப்ளிக், கிட்ஸ் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளியின் இயக்குனர்கள் அருள், சேகர், பள்ளியின் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News