செய்திகள்
ஹெல்மெட்

திண்டுக்கல்லில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை

Published On 2019-08-16 09:06 GMT   |   Update On 2019-08-16 09:06 GMT
திண்டுக்கல்லில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் மற்றும் போக்குவரத்து காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு அபராதம் மற்றும் அதே இடத்தில் ஹெல்மெட் விற்பனை போன்றவை நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் - திருச்சி சாலையில் டி.எஸ்.பி. மணிமாறன் தலைமையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரகாஷ்குமார் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி சிறுவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தன்னை விட குறைந்த வயதுடைய சிறுவர்கள் தங்களுக்கு அறிவுரை கூறுவதை பார்த்தாவது இனிமேல் ஹெல்மெட் அணிய வேண்டும். மேலும் தற்காலிகமாக தயார் செய்து வைக்கப்பட்ட ஹெல்மெட்டை அணிந்து சுற்றி வர வேண்டும் என போலீசார் கூறினர்.

இதனால் ஒரு சில வாகன ஓட்டிகள் மிகுந்த வெட்கம் அடைந்தனர். இனிமேல் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவோம் என தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பண்ணை மெட்ரிக் பள்ளி முதல்வர் வேணுகோபால், சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பரமேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News