செய்திகள்
கலெக்டர் சிவஞானம் தேசிய கொடி ஏற்றினார்.

விருதுநகரில் சுதந்திர தின விழா: ரூ.44 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்

Published On 2019-08-15 16:58 GMT   |   Update On 2019-08-15 16:58 GMT
விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 73-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில் ரூ.44 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.
விருதுநகர்:

விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 73-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் சிவஞானம் காலை 9.05 மணிக்கு தேசிய கொடியேற்றி போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 127 பயனாளிகளுக்கு ரூ.44 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

65 போலீஸ்காரர்கள் உள்பட 223 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில், அரசு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார், திட்ட இயக்குநர் சுரேஷ், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் சுதாகர், முத்துக்குமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சாத்தூர் நல்லமுத்தன் பட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் சிவஞானம் கலந்து கொண்டார். பிற்பகலில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

விருதுநகர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் அமர்வு நீதிபதி லியாகத்அலி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். விருதுநகர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாவட்ட குழு உறுப்பினர் வக்கீல் சீனிவாசன், நகர செயலாளர் காதர் மைதீன் ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.

பெரிய பள்ளிவாசலில் ஜமாத் நிர்வாகிகள் செய்யது, கலீல் ஆகியோர் முன்னிலையில் மவுலவி சேக் மைதீன் பாகவி தேசிய கொடி ஏற்றினார். இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் ஜேசிஸ் சங் கத்தின் அன்பு ஆதரவற்றோர் இல்லத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. செயலாளர் அண்ணாமலை தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். விருதுநகர் தேசபந்து திடலில் நடந்த சுதந்திர தின விழாவில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News