செய்திகள்
சிகரெட்

சிகரெட் குடித்ததை தட்டி கேட்டவரை கத்தியால் குத்திய கசாப் கடை ஊழியர் கைது

Published On 2019-08-15 12:24 GMT   |   Update On 2019-08-15 12:24 GMT
கிருஷ்ணகிரி தர்கா அருகே சிகரெட் குடித்ததை தட்டி கேட்டவரை கத்தியால் குத்திய கசாப் கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி:

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள காரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனவர் மகன் இர்பான் (வயது20). இவர் நேற்று மதியம் கிருஷ்ணகிரி கே.ஏ. நகர் பகுதியில் உள்ள தர்காவிற்கு வந்துள்ளார்.அப்போது, தர்காவின் அருகே நின்று, ஓசூர், சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அயூப்கான் மகன் யாசின் (20), இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு கசாப் கடையில் வேலை பார்க்கிறார்.

இவர், அங்கு சிகரெட் குடித்து கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த இர்பான் இப்படி தர்கா முன்பு சிகரெட் குடிக்கலாமா என கேட்டுள்ளார். இதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த யாசின் தான் வைத்திருந்த கத்தியால் இர்பானை சராமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். 
இதில் பலத்த காயமடைந்த இர்பான் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இது குறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், இர்பானை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் யாசினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News