செய்திகள்
பட்டொளி வீசி பறக்கும் தேசிய கொடி

தண்ணீர் பஞ்சமில்லா பாரதத்தை உருவாக்க வேண்டும்- சத்குரு வேண்டுகோள்

Published On 2019-08-15 05:33 GMT   |   Update On 2019-08-15 05:33 GMT
தண்ணீர் பஞ்சமில்லாத பாரதத்தை உருவாக்க சுதந்திர தினத்தில் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
கோவை:

கோவை ஈஷா யோகா மையத்தில் 73-வது சுதந்திர தினம் இன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஈஷா தன்னார்வலர்கள், சுற்றுவட்டார கிராம மக்கள், பழங்குடியினர் உள்பட பலர் பங்கேற்றனர். வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர் கிட்டுசாமி தேசிய கொடி ஏற்றினார்.

அதைத்தொடர்ந்து, சத்குருவின் சுதந்திர தினச் செய்தி வாசிக்கப்பட்டது. அந்த செய்தியில் அவர் கூறியதாவது:

சுதந்திரம் பெற்ற 72 ஆண்டுகளில், பொருளாதாரம், வியாபாரம், அறிவியல், தொழில்நுட்பம், தேசத்தின் இறையாண்மையை நிறுவுதல் என பல முன்னேற்றங்களை இந்நாடு கண்டிருக்கிறது.
 
முன்னேற்றத்திற்கான நமது பசியில், நமது மக்கள் தொகைக்கு ஏற்றவாறு சாத்தியக்கூறுகளை நிறைவேற்றுவது என்பது சற்றே
சவாலானதுதான்.

இந்த தேசம் நீண்ட தூரம் பயணப்பட்டிருக்கிறது. இந்த எல்லா முயற்சிகளிலும் ஒரு விஷயம் அதிகப்படியான அடி வாங்கியிருக்கிறது. அது நமது மண்ணும் நீரும்தான். தண்ணீர் பஞ்சமில்லா சுதந்திர பாரதத்தை நாம் உருவாக்க வேண்டும். இதுவே நமது உறுதிமொழியாக இருக்கவேண்டும்.

வருங்கால சந்ததியினருக்கு நிறைவான தண்ணீரும் வளமான மண்ணும் விட்டுச்செல்லாவிட்டால், நம் எழுபதாண்டு கால அரசியல் சுதந்திரம் வீணாகிவிடும்.

இந்தியாவின் 73-வது சுதந்திர தினம், தண்ணீர் பிரச்சனையிலிருந்து இந்தியாவை விடுவிப்பதற்கான தினம். இதனை நாம் நிகழச் செய்வோம் என கூறியுள்ளார்.
Tags:    

Similar News