செய்திகள்
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்

இன்று சுதந்திர தினம் - கவர்னர் வாழ்த்து

Published On 2019-08-14 21:10 GMT   |   Update On 2019-08-14 21:10 GMT
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது வாழ்த்தை மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
சென்னை:

சுதந்திர தினம் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளதையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

73-வது சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாட்டு மக்களுக்கு என்னுடைய இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா பெருமை மிகுந்த நாடாக முன்னோக்கி பீடு நடைபோடுகிறது. தன்னம்பிக்கை மிகுந்த நாடாக விளங்குகிறது. சமூக பண்புகள், கலாசாரம், பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் தலைமை பண்புகளால் உலகம் முழுவதும் மதிக்கப்படும் நாடாக இந்தியா விளங்குகிறது.

ஆங்கிலேயர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்கள் துன்பங்கள், துயரங்களை சந்தித்ததோடு, சத்தமின்றி எண்ணற்ற தியாகங்களையும் செய்திருக்கிறார்கள். இதற்காக நாம் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறோம். அவர்களுடைய பங்களிப்புக்கு நன்றிக்கடன் செலுத்தவேண்டும் என்பதை இந்த சுதந்திர தினத்தில் நினைவு கூறுவோம். உண்மையான அர்ப்பணிப்புடன், நாட்டுக்கு சேவையாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் நம்முடைய பங்களிப்பினையும் செய்வோம். அதன் வழியில் பயணிக்க நம்மை தீர்மானிப்போம்.

சுதந்திர வேட்கை காற்றில் கலந்து, இந்தியர்களின் மனதிலும், எண்ணங்களிலும் பரவி அதில் அக்கறை செலுத்தவேண்டும் என்று ஆதிக்கம் செலுத்தட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News