செய்திகள்
ஊட்டி மலை ரெயில்

கனமழை எதிரொலி - ஊட்டி மலை ரெயில் 3 நாட்கள் ரத்து

Published On 2019-08-10 13:42 GMT   |   Update On 2019-08-10 13:45 GMT
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், ஊட்டி மலை ரெயில் நாளை முதல் 3 நாளுக்கு ரத்து செய்யப்படுகிறது என ரெயில்வே அறிவித்துள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட, கொடநாடு, பந்தலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் இந்த ரெயிலில் சுற்றுலா பயணிகள் அதிகளவு பயணம் செய்வார்கள். தற்போது ஊட்டியில் பெய்து வரும் கனமழை காரணமாக மலை ரெயில் சேவை 3 நாட்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, நாளை முதல் 13ம் தேதி வரை மலை ரெயில் இயக்கப்படாது என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News