டெல்லியில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார்.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் கவர்னர் சந்திப்பு
பதிவு: ஆகஸ்ட் 09, 2019 13:34
பிரதமர் நரேந்திர மோடி- கவர்னர் பன்வாரிலால் புரோகித்
சென்னை:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றிருந்தார்.
முன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
இன்று காலையில் பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, அரசியல் நிலவரம் குறித்தும் அவர் விளக்கினார்.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் தமிழகத்தில் அசம்பாவிதத்தை தவிர்க்க செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவரித்தார்.
இன்று மாலை உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சந்திக்க கவர்னர் நேரம் கேட்டுள்ளார். அனுமதி கிடைத்ததும் அவரிடமும் விரிவாக பேசுகிறார்.
அதன் பிறகு கவர்னர் நாளை சென்னை திரும்புகிறார்.