செய்திகள்
பிளாஸ்டிக் (கோப்பு படம்)

களக்காட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published On 2019-08-07 13:15 GMT   |   Update On 2019-08-07 13:15 GMT
களக்காட்டில் 18 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
களக்காடு:

களக்காடு அண்ணா சிலை, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகள் மணிமுத்தாறு காளியப்பன், களக்காடு சுஷ்மா, கோபாலசமுத்திரம் முருகன், மேலச்செவல் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் களக்காடு ஆறுமுகநயினார், வீரவநல்லூர் பிரபாகரன், கல்லிடைகுறிச்சி கந்தசாமி மற்றும் கல்லிடை குறிச்சி, வீரவநல்லூர், மணிமுத்தாறு, மேலச்செவல், கோபாலசமுத்திரம், ஏர்வாடி ஆகிய நகர பஞ்சாயத்துக்களை சேர்ந்த பணியாளர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் 18 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கடை வியாபாரிகளுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், இனி வரும் காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என களக்காடு நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி சுஷ்மா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News