செய்திகள்
மதுரை விமான நிலையம்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு

Published On 2019-08-07 09:54 GMT   |   Update On 2019-08-07 09:54 GMT
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து இதனால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அவனியாபுரம்:

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அறிவுறுத்துதலின்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோல் மத்திய உள்துறை அமைச்சரகம் தமிழக அரசிற்கு அனுப்பியுள்ள எச்சரிக்கையை அடுத்து தமிழக அரசு கூடுதல் காவல்துறை இயக்குநர்கள் தலைமையில் மதுரை, திருச்சி கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஏ.டி.ஜி.பி. அபய்குமார் சிங் தலைமையில் தென்மண்டல பாதுகாப்பு பணியில் மதுரை மாநகர், மதுரை புறநகர், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விமான நிலையம், ரெயில் நிலையங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை தமிழக போலீஸார் என 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதில் விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விரைவு அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். விமான நிலையம் வெளிப்புறம் சுற்றுப்புறங்களில் கண்காணிக்க தமிழக போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கண்காணிப்பு குழுக்கள் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News