செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

பெரியாறு அணை நீர்பிடிப்பில் மீண்டும் மழை

Published On 2019-08-06 09:25 GMT   |   Update On 2019-08-06 09:25 GMT
பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. ஆனால் விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.

அவ்வப்போது கேரளாவில் பெய்த மழையினால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து இருந்து வந்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய காலத்தில் சில நாட்கள் மட்டுமே நீர்வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் நீடிக்குமா? என விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 113.30 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 113.40 அடியாக உயர்ந்துள்ளது.

நேற்று 108 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 496 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1459 மி.கன அடியாக உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 30.71 அடியாக உள்ளது. வரத்து 168 கன அடி. திறப்பு 60 கன அடி. இருப்பு 398 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.10 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 25.11 அடி.

பெரியாறு 41, தேக்கடி 21 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News