செய்திகள்
மழையில் நனையும் மக்கள்

நீலகிரியில் தொடரும் கனமழை - ஊட்டி உள்ளிட்ட 4 தாலுக்காக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published On 2019-08-06 03:13 GMT   |   Update On 2019-08-06 04:10 GMT
நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஊட்டி, குந்தா, கூடலூர் ,பந்தலூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்டு மாதம் வரை தென்மேற்கு பருவ மழை பெய்வது வழக்கம். இந்த ஆண்டு மிக தாமதமாக பருவமழை தொடங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கேரள மாநிலத்தையொட்டியுள்ள எல்லையோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மற்ற இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் குந்தா, கூடலூர் ,பந்தலூர், அப்பர்பவானி பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால்  மேற்குறிப்பிட்ட 4 தாலுக்காக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் இன்னசெண்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

மழை காரணமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் இறங்கவோ, கரையோரங்களுக்கு செல்லவோ கூடாது என வருவாய் மற்றும் தீயணைப்பு துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
Tags:    

Similar News