செய்திகள்
ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறும் காட்சி

திருச்சி ஜங்ஷனில் மேம்பாட்டு பணிக்காக டிக்கெட் மையம் முன்பு டைல்ஸ் கற்கள் பெயர்ப்பு

Published On 2019-08-05 18:10 GMT   |   Update On 2019-08-05 18:10 GMT
திருச்சி ஜங்ஷனில் மேம்பாட்டு பணிக்காக டிக்கெட் மையம் முன்பு டைல்ஸ் கற்கள் பெயர்ப்பு செய்த சம்பவத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
திருச்சி:

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரூ.30 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் ஒன்றாக டிக்கெட் மையம் முன்பு ஏற்கனவே உள்ள ‘டைல்ஸ்’ கற்கள் பெயர்க்கப்பட்டு புதியதாக கான்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் தரைத்தளத்தில் ‘டைல்ஸ்’ கற்களை பெயர்க்கும் பணி நேற்று முன்தினம் நடந்தது. இதனால் டிக்கெட் மையம் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த பணியால் ரெயில் டிக்கெட் எடுக்க செல்லும் போது பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ஏற்கனவே நல்ல முறையில் இருந்த ‘டைல்ஸ்’ கற்களை பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து அகற்றியதை கண்டு பயணிகள் சிலர் அதிருப்தி அடைந்தனர். இது குறித்து பயணிகள் கூறுகையில், “ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் என்ற பெயரில் நல்ல முறையில் உள்ளவற்றையும் இடித்து அகற்றி வருகின்றனர். இதற்கான செலவு தொகையை பயணிகளுக்கான அடிப்படை வசதிகளில் மேம்படுத்துவதில் செலவு செய்யலாம்.

முக்கிய பிரமுகர்களின் நுழைவுவாயில் இடிக்கப்பட்டு புதியதாக கட்டப்பட்டுள்ளது. இந்த தோற்றம் ஏற்கனவே இருந்ததை போலத்தான் உள்ளது. இதில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் தெரியவில்லை. இதேபோல டிக்கெட் மையம் முன்பு உள்ள நுழைவுவாயிலையும் இடித்து விட்டு புதியதாக கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நுழைவுவாயில் நல்ல முறையில் தான் உள்ளது. இதனை இடித்து அகற்ற வேண்டியதில்லை” என்றனர்.
Tags:    

Similar News