செய்திகள்
சென்னை உயர்நீதிமன்றம்

நீட் விலக்கு மசோதா விவகாரம்- தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

Published On 2019-08-01 11:28 GMT   |   Update On 2019-08-01 11:28 GMT
நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவலை 2 ஆண்டுகளாக வெளியிடாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை:

நீட் விலக்கு மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறக்கோரி பிரின்ஸ் கஜேந்திர பாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவலை 2 ஆண்டுகளாக வெளியிடாதது ஏன்? நீட் விலக்கு பற்றி மக்கள் பரவலாக பேசி வந்த நிலையில் அரசு மவுனம் காத்தது ஏன்? மசோதா நிராகரிக்கப்பட்டால் புதிய மசோதா நிறைவேற்ற விதிகள் இருந்து அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீட் விலக்கு மசோதாக்களை திரும்ப பெற்றுக்கொண்ட அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இதுகுறித்து தமிழக அரசு ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.



2017 செப்.22ல் திருப்பி அனுப்பிய மசோதாவை 3 நாளில் அரசு பெற்றதற்கு சான்றொப்பம் உள்ளதாக மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

கடிதம் பெற்றுக்கொண்டதை இதுவரை எந்த தளத்திலோ, யாரிடமோ அல்லது நீதிமன்றத்திலோ ஏன் கூறவில்லை?  நீட்விலக்கு மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது திருப்பி அனுப்பியது என்றுதான் அர்த்தம். மாநில அரசு மீண்டும் 6 மாதத்தில் மசோதா அனுப்பினால் குடியரசுத் தலைவர் பரிசீலிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News