செய்திகள்
நகை பறிப்பு

கொரடாச்சேரி அருகே ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு

Published On 2019-07-30 10:26 GMT   |   Update On 2019-07-30 10:26 GMT
கொரடாச்சேரி அருகே இன்று காலை துணிகரம் ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர், ஜூலை.30-

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பண்ணைவிளாகம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் எமல்டா (வயது 37).

இவர் இன்று காலை 9 மணியளவில் பள்ளிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டு வந்தார். கங்கனாங் சேரி- பண்ணை விளாகம் ரோட்டில் அவர் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த 2 வாலிபர்கள் திடீரென எமல்டாவை வழிமறித்தனர். அப்போது அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 2 வாலிபர்களும் திடீரென எமல்டா கழுத்தில் கிடந்த தாலி செயினை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த எமல்டா, அந்த வாலிபர்களின் கையில் சிக்கிய செயினை மீட்க போராடினார். அப்போது திடீரென செயினை இரண்டாக அறுந்தது. இதில் வாலிபர்களின் கையில் 3 பவுன் சிக்கியது. இதனால் அந்த வாலிபர்கள் கிடைத்த வரை லாபம் என்று எண்ணி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.

இதற்கிடையே கொள் ளையர்களிடம் இருந்து போராடி மீட்ட 3½ பவுன் செயினுடன் ஆசிரியை எமல்டா நன்னிலம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டப்பகலில் ஆசிரியையிடம் நகை பறிப்பு நடந்த சம்பவம் கொரடாச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

Tags:    

Similar News