செய்திகள்
வாட்ஸ்அப்

ரூட் தல பிரச்சினை இருந்தால் வாட்ஸ் அப்பில் தெரிவியுங்கள் - போலீசார் வேண்டுகோள்

Published On 2019-07-30 03:07 GMT   |   Update On 2019-07-30 03:07 GMT
ரூட் தல பிரச்சினை இருந்தால் வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை:

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டப்பகலில் ‘ரூட் தல’ என்ற பெயரில் மாணவர்கள் கத்தியுடன் சாலையில் மோதலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தையும், மாணவர்கள் மீதான வெறுப்பையும் உருவாக்கியது. மாணவர் சமுதாயத்தை சீரழிக்கும் இதுபோன்ற ‘ரூட் தல’ என்ற பெயரில் நடக்கும் அடாவடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.



இதைத்தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ‘ரூட் தல’ என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் யாராவது சட்டவிரோத செயலில் ஈடுபட்டால் 9087552233 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணிலும், காவல்துறையின் முகநூல், டுவிட்டர் கணக்குகளிலும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் போலீசார் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News