செய்திகள்
பாலிதீன் பைகள்

திருவாரூர் அருகே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published On 2019-07-27 17:31 GMT   |   Update On 2019-07-27 17:31 GMT
திருவாரூர் அருகே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருவாரூர்:

சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி உணவு பொருட்களில் பயன்படுத்தும் பாலிதீன் பைகள், பாலிதீன் தாள், தெர்மாக்கோல் தட்டுகள், பாலிதீன் பூசப்பட்ட காகித தட்டுகள், காகித குவளைகள், டீ கப்புகள், வாட்டர் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை வணிகர்கள் கடைபிடிக்கின்றனரா? என்பது குறித்து மாவட்ட கலெக்டர் ஆனந்த் உத்தரவின்படி திருவாரூர் அருகே உள்ள அலிவலம் கடைவீதியில் திருவாரூர் வட்டார வளர்ச்சி அதிகாரி தேவராஜ் தலைமையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் மற்றும் அலுவலர்கள் கடை, கடையாக சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் கடை உரிமையாளருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News