செய்திகள்
மகாத்மா காந்தி

காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி சிறப்பு தபால் உறை வெளியீடு

Published On 2019-07-27 03:20 GMT   |   Update On 2019-07-27 03:20 GMT
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி சிறப்பு தபால் உறையை தமிழ்நாடு தபால் வட்ட தலைமை இயக்குனர் சம்பத் சென்னை தலைமை தபால் அலுவலகத்தில் வெளியிட்டார்
சென்னை:

மகாத்மாகாந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 1896-ம் ஆண்டு முதல் 1946-ம் ஆண்டு வரை மகாத்மா காந்தியின் வரலாற்று சிறப்புமிக்க தமிழக வருகையை நினைவுகூரும் வகையில் வருகிற 2-ந் தேதி வரை தமிழ்நாடு தபால் வட்டம் சிறப்பு தபால் உறைகளையும், தபால் முத்திரையையும் வெளியிட திட்டமிட்டது.

அதன்படி, முதல் சிறப்பு தபால் உறையை தமிழ்நாடு தபால் வட்ட தலைமை இயக்குனர் சம்பத் சென்னை தலைமை தபால் அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார். 
Tags:    

Similar News