செய்திகள்
திருத்தணியில் குவிந்துள்ள பக்தர்கள்

ஆடிக்கிருத்திகை - தமிழகத்தில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2019-07-26 02:48 GMT   |   Update On 2019-07-26 02:48 GMT
தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை:

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

திருச்செந்தூர், திருத்தணி, பழநி உள்ளிட்ட அறுபடை கோவில்களிலும் பக்தர்கள் திரண்டனர். பால் குடம் எடுத்தும் அலகுகள் குத்தியும் தங்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை வடபழனி உள்ளிட்ட முக்கியமான முருகண் கோவில்களில் பக்தர்கள் காலை முதல் தரிசனம் செய்தனர். பல்வேறு வகையான காவடிகள் எடுத்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.

இதேபோல், தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்கள் மற்றும் அம்மன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News