செய்திகள்
கைது

ஆரோவில் முந்திரி காட்டில் சதிதிட்டம் தீட்டி கத்தியுடன் பதுங்கி இருந்த ரவுடி கைது

Published On 2019-07-23 11:34 GMT   |   Update On 2019-07-23 11:34 GMT
ஆரோவில் முந்திரி காட்டில் சதித்திட்டம் தீட்டி கத்தியுடன் பதுங்கி இருந்த பிரபல ரவுடியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

சேதராப்பட்டு:

புதுவை அருகே தமிழக பகுதியான நாவற்குளம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் உதயராஜ் (வயது 26). பிரபல ரவுடியான இவர் மீது மேட்டுப்பாளையத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கு, விழுப்புரத்தில் நடந்த ஜெனா கொலை வழக்கு மற்றும் 3 வழிப்பறி வழக்குகள் உள்ளன.

இதற்கிடையே உதயராஜ் தனது கூட்டாளிகளுடன் குற்றசெயலில் ஈடுபட சதி திட்டம் தீட்டி ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் உத்தரவின் பேரில் ஆரோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் குற்றப்பிரிவு போலீசார் உதயராஜை பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டனர்.

இந்த நிலையில் உதயராஜ் பொம்மையார் பாளையம்- ஆரோவில் முந்திரி காட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து ஆரோவில் போலீசார் முந்திரி காட்டில் பதுங்கி இருந்த உதயராஜை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News