செய்திகள்
மெட்ரோ ரெயில்

தொழில்நுட்ப கோளாறு- மெட்ரோ ரெயில் சேவை 3-வது நாளாக பாதிப்பு

Published On 2019-07-23 04:14 GMT   |   Update On 2019-07-23 04:14 GMT
கடந்த 3 நாட்களாக தொடர்ந்து தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை:

சென்னை நகரில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்டரலில் இருந்து விமான நிலையம் வரையும், வண்ணாரப் பேட்டையில் இருந்து விமான நிலையத்துக்கும் மெட்ரோ ரெயில் ஓடுகிறது. தினமும் ஒரு லட்சம் பேர் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 11 மணிக்கு வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் ரெயில் புறப்படுவதில் 7 நிமிடம் தாமதம் உண்டானது. அதேபோல் மாலை 3.45 மணிக்கு சிக்னலில் ஏற்பட்ட கோளாறு காரணத்தால் விமான நிலையத்தில் இருந்து சென்டரல் செல்லும் இரவு நேர ரெயில் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு சென்று அங்கிருந்து மாறி செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இதேபோல் 20-ந்தேதி தொழில் நுட்ப கோளாறு காரணமாக சென்னை சென்டரல் மெட்ரோ நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது. வண்ணாரப்பேட்டையில் சில ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

21-ந்தேதி சென்னை சென்ட்ரல்- வண்ணாரப் பேட்டை இடையே அரை மணி நேரம் சிக்னல் பிரச்சினை ஏற்பட்டது.
Tags:    

Similar News