செய்திகள்
ஜெயலலிதா இல்லம்

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு? அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On 2019-07-22 11:39 GMT   |   Update On 2019-07-22 11:49 GMT
ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் தான் கழித்தார்.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோதும், எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தபோதும் பல முக்கிய முடிவுகளை இந்த வீட்டில் இருந்த போதே எடுத்திருந்தார். யாரும் நெருங்க முடியாத கோட்டையாக இருந்த போயஸ் கார்டன் வேதா நிலையம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு களைஇழந்து போனது.

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு என்ன என்பது குறித்து ஆகஸ்ட் 5-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஜெயலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணி தற்போது என்ன நிலையில் உள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

Similar News