செய்திகள்
தெரு நாய் கடித்ததால் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்தவர்கள்

21 பேரை கடித்து குதறிய தெரு நாய் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Published On 2019-07-22 10:26 GMT   |   Update On 2019-07-22 10:26 GMT
நெட்டப்பாக்கம் அருகே 21 பேரை தெரு நாய் கடித்து குதறியது. அவர்கள் நெட்டப்பாக்கம் மற்றும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் அருகே மொளப்பாக்கம், குச்சிபாளையம் பகுதிகளில் தெருநாய்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் அப்பகுதியில் நடந்து செல்வோரையும், 2 சக்கர வாகனங்களில் செல்பவர்களையும் தெருநாய்கள் விரட்டுவதால் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் ஒரு தெரு நாய் 4 ஆடுகளை கடித்து குதறியது. மேலும் அந்த வழியாக நடந்து சென்ற எம். குச்சிபாளையம், மொளப்பாக்கம், சூரமங்கலம் காலனி, நெட்டப்பாக்கம், பகுதிகளை சேர்ந்த நீலா (வயது45), தேவராசு (71), ஜெயா (40), சுப்பிரமணி (50), ஆர்த்தி (26), பானுமதி உள்ளிட்ட 21 பேரை நாய் விரட்டி விரட்டி கடித்தது. அவர்கள் நெட்டப்பாக்கம் மற்றும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

Tags:    

Similar News