செய்திகள்
கவிஞரேறு வாணிதாசனார் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி மலரஞ்சலி

வாணிதாசனார் பிறந்த நாள் - நினைவிடத்தில் நாராயணசாமி மலரஞ்சலி

Published On 2019-07-22 09:48 GMT   |   Update On 2019-07-22 09:48 GMT
கவிஞரேறு வாணிதாசனார் பிறந்த நாளான இன்று அவரது நினைவிடத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி மலரஞ்சலி செலுத்தினர்.
பாகூர்:

புதுவை அரசு கலை, பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சைத் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் கவிஞரேறு வாணிதாசனார் பிறந்த நாள் விழா இன்று காலை சேலியமேட்டில் நடைபெற்றது.

வாணிதாசனார் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி மலரஞ்சலி செலுத்தினர்.

மேலும் கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் கணேசன் மற்றும் அரசு அதிகாரிகளும் தமிழறிஞர்களும் வாணிதாசனார் குடும்பத்தினரும், பொதுமக்களும், மாணவ-மாணவியரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து புதுவை தருமு குழுவினரின் சேர்ந்திசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கவிஞரேறு வாணிதாசனார் பாடல்கள் இசையோடு பாடப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழ் மாமணி முனிவர் வேல்முருகன், புலவர் ஹரிஹரன், நல்லாசிரியர் பூங்குழலி பெருமாள், அருள்செல்வி உள்ளிட்ட அறிஞர்கள் கவிஞரேறு வாணிதாசனார் குறித்து சிறப்புரையாற்றினர்.

இதனை தொடர்ந்து பாகூர் வசந்தம் நாட்டியவர் ஷினி குழுவினரின் குழு நட னம் நடைபெற்றது. மேலும் வாணிதாசனார் கவிதைகள் குறித்து பேச்சு, மனப்பாடம், மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஹரிகரன், மஞ்சினி, சம்பத், ராமமூர்த்தி, கணிகண்ணன் மற்றும் வாணிதாசனார் குடும்பத்தினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News