தவளக்குப்பம் அருகே ராட்சத அலையில் சிக்கி மீனவர் பலியானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தவளக்குப்பம் அருகே ராட்சத அலையில் சிக்கி மீனவர் பலி
பதிவு: ஜூலை 19, 2019 19:54
ராட்சத அலை
பாகூர்:
தவளக்குப்பம் அருகே நல்லவாடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது60), மீனவர். இவருக்கு கனகராணி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். நேற்று அதிகாலை ராமச்சந்திரன் காலை கடனை கழிக்க அங்குள்ள கடற்கரைக்கு சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் சிறிது நேரத்திற்கு பின்னர் கடற்கரையில் ராமச்சந்திரன் மயங்கி கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ராமச்சந்திரனை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராமச்சந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ராமச்சந்திரன் கால் கழுவும்போது ராட்சத அலையில் சிக்கி பலியானது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.