செய்திகள்
பிளாஸ்டிக் டம்ளர்கள்

டாஸ்மாக் பார்களில் பயன்படுத்திய பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல்

Published On 2019-07-19 08:46 GMT   |   Update On 2019-07-19 08:46 GMT
பொன்னேரி பகுதியில் டாஸ்மாக் பார்களில் பயன்படுத்திய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொன்னேரி:

பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் கும்மிடிபூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கே அனுமதி இல்லாமல் இயங்கி வரும் பார்களில் இரவு நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்பது குறித்து தொடர் புகார்கள் வந்தது.

இதையடுத்து டாஸ்மார்க் மேலாண்மை இயக்குனர் உத்தரவின் பேரில் சென்னை சிறப்பு படை சப்-கலெக்டர் மாலதி டாஸ்மார்க் கடை மற்றும் பார்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பார்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்துவது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்தார். மேலும் பறிமுதல் செய்த பிளாஸ்டிக் மற்றும் அனுமதியின்றி பார்களில் வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்பட்ட மதுபானத்தையும் பறிமுதல் செய்தார்.

இதுகுறித்து மண்டல இயக்குனரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனுமதியின்றி செயல்படும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சப்-கலெக்டர் மாலதி கூறினார்.

Tags:    

Similar News