செய்திகள்
பிளாஸ்டிக் (கோப்பு படம்)

மதுரையில் 1200 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2019-07-18 12:26 GMT   |   Update On 2019-07-18 12:26 GMT
மதுரையில் 1200 கிலோ பிளாஸ்டிக் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
மதுரை:

சுற்றுப்புற சூழலை பாதுகாக்க மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனா லும் சட்ட விரோதமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன.

அவ்வப்போது அதி காரிகள் நடவடிக்கை எடுத்தாலும் பிளாஸ் டிக் பயன்பாடு குறைந்த பாடில்லை. மதுரை நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன் உத்தர வுப்படி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வரு கின்றனர்.

இந்த நிலையில் மதுரை வடக்குமாசி வீதியில் இன்று காலை மினி லாரியில் பிளாஸ்டிக் பைகள் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி நகர்நல அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட கேரி பைகள் 1200 கிலோ இருப்பது கண்டறியப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி கமி‌ஷனர் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டதோடு, சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக இதுவரை மாநகராட்சி சார்பில் ரூ.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News