செய்திகள்
போராட்டம்

சோழவரம் அருகே இலவச லேப்-டாப் கேட்டு மாணவர்கள் மறியல்

Published On 2019-07-18 08:39 GMT   |   Update On 2019-07-18 08:39 GMT
சோழவரம் அருகே இலவச லேப்-டாப் வழங்கக்கோரி சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்குன்றம்:

பாடியநல்லூரில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 13-ந்தேதி நடந்த நிகழ்ச்சியின்போது 15 அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்-டாப்களை அமைச்சர் வழங்கினார்.

அப்போது 2016-17 மற்றும் 2017-18 ஆண்டுகளில் படித்த மாணவ- மாணவிகளுக்கு லேப்-டாப் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் அலமாதி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் லேப்டாப் வழங்கக்கோரி திடீரென பள்ளி முன் செங்குன்றம்- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரியின் கண்ணாடியை கல்வீசி உடைத்தனர்.

தகவல் அறிந்ததும் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News