செய்திகள்
சென்னை உயர் நீதிமன்றம்

7 பேர் விடுதலை விவகாரம்- நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

Published On 2019-07-18 05:29 GMT   |   Update On 2019-07-18 05:29 GMT
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை தொடர்பாக நளினி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
சென்னை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. 2018ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்ட இந்த  தீர்மானம்  மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். 

இந்த விஷயத்தில் ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். 



இந்நிலையில், 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். 

அமைச்சரவை தீர்மானம் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News