செய்திகள்
கைது செய்யப்பட்ட 2 பேரை படத்தில் காணலாம்

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: வாலிபர் கடத்தல் - 2 பேர் கைது

Published On 2019-07-17 08:45 GMT   |   Update On 2019-07-17 08:54 GMT
அண்ணாநகர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வாலிபரை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணாநகர்:

மீஞ்சூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் ஈக்காட்டு தாங்கலில் வேலை வாங்கி கொடுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

அவர், தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலம் அரசு வேலை வாங்கி கொடுக்க முடியும் என்று நண்பர்களிடம் தெரித்தார்.

இதனை அறிந்த ராமநாதபுரத்தை சேர்ந்த கோபி ரூ.10 லட்சமும், கண்ணன் ரூ.35 லட்சமும் அரசு வேலைக்காக கார்த்திகேயனிடம் கொடுத்ததாக தெரிகிறது.

ஆனால் அவர் கூறியபடி அரசு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்க மறுத்து காலம் கடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி அமைந்தகரைக்கு சென்ற கார்த்திகேயன் திடீரென மாயமானார். இது குறித்து அவரது அக்காள் அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் கார்த்திகேயனை, அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த கோபியும், கண்ணனும் ராமநாதபுரத்துக்கு கடத்தி சென்று இருப்பது தெரிந்தது.

இதற்கிடையே வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக ஒப்புக் கொண்டதால் நேற்று மாலை கார்த்திகேயனை விடுவிப்பதற்காக கோபியும், கண்ணனும் மீண்டும் காரில் அமைந்தகரைக்கு வந்தனர். இதனை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று கோபி, கண்ணனை கைது செய்தனர். கார்த்திகேயனை மீட்டனர்.

கார்த்திகேயன் பலரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து இருப்பது தெரிந்தது. இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News