செய்திகள்
அரசு பள்ளி மாணவர்கள்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 3 லட்சம் குறைந்தது

Published On 2019-07-17 05:07 GMT   |   Update On 2019-07-17 06:58 GMT
அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் 3 லட்சத்துக்கு மேல் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.
சென்னை:

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. 37 ஆயிரத்து 358 அரசு பள்ளிகளில் 2017-18-ம் கல்வியாண்டில் 46 லட்சத்துக்கு 60 ஆயிரத்து 965 மாணவர்கள் இருந்தனர்.

2018-19 கல்வியாண்டில் 44 லட்சத்து 13 ஆயிரத்து 336 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். இதனால் 2 லட்சத்து 47 ஆயிரத்து 629 மாணவர் சேர்க்கை குறைந்தது.

8357 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2017-18-ம் கல்வியாண்டில் 22 லட்சத்து 99 ஆயிரத்து 17 மாணவ-மாணவிகள் சேர்ந்தனர்.

2018-19-ம் கல்வியாண்டில் 22 லட்சத்து 31 ஆயிரத்து 88 மாணவ-மாணவிகள் சேர்ந்து உள்ளனர். இதில் 67 ஆயிரத்து 929 மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. இதனால் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் 3 லட்சத்துக்கு மேல் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.

அதே வேளையில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இருக்கிறது. 2017-18-ம் கல்வியாண்டில் 52 லட்சத்து 71 ஆயிரத்து 543 மாணவ-மாணவிகள் தனியார் பள்ளிகளில் படித்தனர்.

2018-19-ம் கல்வியாண்டில் 12 லட்சம் மாணவர் சேர்க்கை அதிகரித்து 64 லட்சத்து 81 ஆயிரத்து 598 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.



அரசு பள்ளிகளில் 2017-18-ம் கல்வியாண்டில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 466 ஆசிரியர்கள் பணியாற்றினர். 2018-19-ம் கல்வியாண்டில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 990 ஆசிரியர்கள் உள்ளனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2017-18 கல்வியாண்டில் 80 ஆயிரத்து 217 ஆசிரியர்கள் இருந்தனர்.

2018-19-ம் கல்வியாண்டில் 36 ஆயிரத்து 361 ஆசிரியர்கள் உள்ளனர்.


Tags:    

Similar News