செய்திகள்
போராட்டம்

கடலாடி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

Published On 2019-07-16 11:14 GMT   |   Update On 2019-07-16 11:14 GMT
குடிநீர் வசதி செய்துதர கோரி கடலாடி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலாடி:

கடலாடியில் 2013-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கலை மற்றம் அறிவியல் கல்லூரி கொண்டு வரப்பட்டது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்

கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும் குடிநீர் வசதி செய்து தரப்படாமல் உள்ளது. கல்லூரி மாணவ- மாணவிகள் குடிநீர் வசதி செய்து தரக்கோரி பலமுறை அரசு கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை.

குடிநீர் வசதி செய்து தரக்கோரி நேற்று மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கடலாடி தாசில்தார் முத்துக்குமார், கடலாடி ஒன்றிய ஆணையாளர் அன்புக்கண்ணன் ஆகியோர் மாணவ- மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவ- மாணவிகள் கல்லூரி அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன் மூலம் கல்லூரிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்ற அதிகாரிகள் விரைவில் குடிநீர் பிரச்சினை சரி செய்து தரப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News