செய்திகள்
சென்னை ஐகோர்ட்

ரூ.100 கோடி அபராதம்- பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி

Published On 2019-07-12 06:53 GMT   |   Update On 2019-07-12 06:53 GMT
தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை:

சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய நீர்நிலைகளை பராமரிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜவஹர்லால் சண்முகம் உள்ளிட்டோர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், நீர்நிலைகளை பராமரிக்க தவறியதாக தமிழக பொதுப்பணித்துறைக்கு ரூபாய் 100 கோடி அபராதம் விதித்தது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.



இந்த தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நீதிபதிகள் உறுதி செய்தனர். பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர முடியும் என கூறி, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
Tags:    

Similar News