ஊத்துக்கோட்டையில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டையில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. மாலை 4.30 மணிக்கு தொடங்கிய மழை 5.30 மணி வரை நீடித்தது.
இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.
சுட்டரிக்கும் வெயிலில் அவதிப்பட்டு வந்த பொது மக்கள் பலத்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளி விட்டு வந்த மாணவர்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் மழை நீரில் நனைந்தபடி சென்றனர்.