செய்திகள்
கைது

ஆரணி அருகே வேனில் நெல்மூட்டைக்கு அடியில் மணல் கடத்தியவர் கைது

Published On 2019-07-11 14:16 GMT   |   Update On 2019-07-11 14:16 GMT
ஆரணி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேனில் நெல்மூட்டைகள் அடியில் வைத்து மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆரணி:

ஆரணி அடுத்த விண்ணமங்கலம் செய்யாற்று படுகையில் லாரி, வேன், மாட்டுவண்டி பைக் போன்ற வாகனங்களில் இரவு பகலாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. அதிகாரிகள் அவ்வபோது மணல் கொள்ளையர்களை கைது செய்து வருகின்றனர். ஆனாலும் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் வடுகசாத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். மேற்பரப்பில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துவிட்டு அடி பகுதியில் மணல் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

வேனை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் ஆரணி அருகே உள்ள மோட்டூரை சேர்ந்த கோபி (வயது 29) என்பது தெரியவந்தது. இதையடுத்து வேனை மணலுடன் பறிமுதல் செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News