செய்திகள்
முக ஸ்டாலின்

நீட் மசோதாக்கள் நிராகரிப்பு விவகாரம்- சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு

Published On 2019-07-10 06:22 GMT   |   Update On 2019-07-10 06:22 GMT
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட விஷயத்தில் அமைச்சரின் விளக்கம் திருப்தி அளிக்காததால் திமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சென்னை:

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 2 மசோதாக்களையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்த விவகாரம் இன்று தமிழக சட்டசபையில் எதிரொலித்தது.

சட்டசபையில் இன்று நீட் மசோதாக்கள் நிராகரிப்பு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, நீட் மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்த தகவலை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மறைத்ததாகவும், தவறான தகவலை அளித்ததற்காக அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், நீட் மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவே தகவல் வந்தது, நான் கூறியது தவறு என்றால் பதவி விலக தயார் என்றார்.

அமைச்சரின் இந்த விளக்கம் திருப்தி அளிக்காததால் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
Tags:    

Similar News