செய்திகள்
பிளாஸ்டிக் (கோப்பு படம்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு

Published On 2019-07-09 16:49 GMT   |   Update On 2019-07-09 16:49 GMT
ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் பைகளின் புழக்கம் அதிகரித்துள்ளதால் அதிகாரிகள் பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்த வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்:

தமிழக அரசு கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தட்டுகள் உள்ளிட்ட மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்றும் அதற்கு மாற்றாக வாழை இலை, பாக்கு மர தட்டுகள், துணி பைகள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்திருந்தது.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் அறிவுரையின்பேரில் அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் கடைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் அவ்வப்போது ஆய்வு நடத்தி வந்தனர்.

கடைகளில் பதுக்கி வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதமும் விதித்தனர். இதையடுத்து பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறைந்தது.

ஆனால் பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஆய்வு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதை சாதகமாக்கிய சிறு வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகளை மீண்டும் பயன்படுத்த தொடங்கினர். ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் பைகளின் புழக்கம் மீண்டும் தலை தூக்கியுள்ளது.

இரவு நேரத்தில் ஓட்டல்கள் மற்றும் கடைகளில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து துணிபைகள் கொண்டு வருவதை தவிர்த்து விட்டனர்.

எனவே அதிகாரிகள் பிளாஸ்டிக் ஒழிப்பை நடைமுறைப்படுத்தி மீண்டும் ஆய்வுப்பணியை தீவிரப்படுத்த வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News