செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன் - விஜயகாந்த்

‘நீட்’ தேர்வுக்கு ஆதரவாக கருத்து - விஜயகாந்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு

Published On 2019-07-09 03:19 GMT   |   Update On 2019-07-09 03:19 GMT
‘நீட்’ தேர்வுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை:

‘நீட்’ தேர்வுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்திருந்தார். ‘நீட்’ தேர்வு தொடர்பான விஜயகாந்தின் கருத்தை தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்று, பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

தமிழக எதிர்க்கட்சிகள் ‘நீட்’ தேர்வு குறித்து பொய்யான வாக்குறுதிகள் வேண்டாம் என்றும், ‘நீட்’ தேர்வில் சாதித்தவர்களும் தமிழர்களே என்றும், சாதனையாளர்களை வாழ்த்துவோம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News