செய்திகள்
யானை

குன்னூரில் பலாப்பழம் சாப்பிட வந்த யானை தாக்கி முதியவர் பலி

Published On 2019-07-08 08:18 GMT   |   Update On 2019-07-08 08:18 GMT
குன்னூரில் பலாப்பழம் சாப்பிட வந்த யானை தாக்கி முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதின் மையப்பகுதில் அமைந்துள்ள ஆனைபள்ளம் ஆதிவாசி கிராமம். இங்கு யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன.

இந்நிலையில் ஆனைபள்ளம் சின்னான்கொம்பை பகுதியை சேர்ந்த மாரிசெல்வம் (வயது 65). இவர் குன்னூர் சென்று விட்டு இரவு வீட்டுக்கு புறப்பட்டார். இரவு நேரமாகி விட்டதால் வனவிலங்கு அச்சத்தால் குறுக்கு வழியில் நடந்தார். சின்னாலகொம்பை என்ற பகுதியில் வந்தபோது அங்கு பலா பழம் சாப்பிட 5 யானைகள் வந்தன. இருட்டில் யானைகள் இருப்பதை முதியவர் கவனிக்கவில்லை. இதனால் யானைகள் அவரை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மாரிச்செல்லம் உடல் நசுங்கி பலியானார்.மாரிசெல்வம் யானை தாக்கி பலியான சம்பவம் இன்று அதிகாலையே அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது.

இது குறித்து குன்னூர் வனத்துறைக்கு பல முறை தகவல் கொடுத்தும் வர வில்லை என ஆதிவாசிகள் குற்றச்சாட்டினர்.

Tags:    

Similar News