செய்திகள்
அரசு பேருந்தில் ஆங்கிலம், இந்தி வாசகங்கள்

மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய புதிய பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை - கனிமொழி எம்.பி கண்டனம்

Published On 2019-07-07 06:36 GMT   |   Update On 2019-07-07 06:36 GMT
தமிழக மக்களின் பணத்தில் வாங்கிய பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை என தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய புதிய அரசு பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை என தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், தமிழக மக்களின் வரிப்பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை. மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால், நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கிறது அதிமுக அரசு என பதிவிட்டுள்ளார்.



அரசு பேருந்தில் EMERGENCY, FIRE EXTINGUISHER  என்பது ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே உள்ளது என குறிப்பிட்டுள்ள கனிமொழி, தமிழக அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News