செய்திகள்
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

நாமக்கல்லில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-07-06 18:28 GMT   |   Update On 2019-07-06 18:28 GMT
நாமக்கல் மின்பகிர்மான வட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல்:

கள உதவியாளர் பணியிடங்களை கேங்மென் என்ற பெயரில் பணிநியமன திருத்தம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். கள உதவியாளர்களை நியமனம் செய்திட வேண்டும். கள உதவியாளர் பணியிடங்களை ரத்து செய்ய கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மின்பகிர்மான வட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பொருளாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை தலைவர் ஜோதிமணி, கிளை செயலாளர் கோவிந்தராசு, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பணி நியமனத்தில் வயது, கல்வி தகுதி நிர்ணயம் செய்யப்பட்டதில், ஒப்பந்த தொழிலாளிக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். எழுத்து தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 
Tags:    

Similar News