செய்திகள்
விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி

தென்காசியை தனி மாவட்டமாக்க பரிசீலனை - இசக்கி சுப்பையா இணையும் விழாவில் முதல்வர் பழனிசாமி

Published On 2019-07-06 15:03 GMT   |   Update On 2019-07-06 15:03 GMT
முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா அ.தி.மு.க.வில் இணையும் விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, தென்காசியை தனி மாவட்டமாக்க பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.
தென்காசி:

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அ.ம.மு.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலர் அதில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள். நெல்லை மாவட்டத்திலும் பல முக்கிய நிர்வாகிகள் அ.ம.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள்.

அ.ம.மு.க. அமைப்பு செயலாளர்கள் அண்ணாமலை, ஆர்.பி.ஆதித்தன், நெல்லை வடக்கு மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, கிழக்கு மாவட்ட செயலாளர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சென்னையில் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இதற்கிடையே, அ.ம.மு.க. மாநில பேரவை இணைச்செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா அக்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகினார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் உள்பட 20 ஆயிரம் பேர் இன்று அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதற்கான விழா தென்காசி இசக்கி மஹாலில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சியின் உறுப்பினர் அட்டை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்த ஆட்சி கலைந்து விடும் என சிலர் கனவு கண்டனர். நெல்லை மாவட்டத்தில் அ.ம.மு.க.வின் கூடாரம் காலியாகி விட்டது.
ஒருபோதும் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது - 

நாங்குநேரி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுத் தரவேண்டும். எந்த தேர்தல் வந்தாலும் இரவு - பகல் பாராமல் வெற்றி பெற பாடுபட வேண்டும். நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க. வெற்றி பெற்றது.

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிப்படி, ஏழைக் குடும்பங்களுக்கு இன்னும் 2 மாதங்களில் 2 ஆயிரம் வழங்கப்படும். தென்காசி மக்களின் கோரிக்கையை ஏற்று நெல்லையை இரண்டாகப் பிரித்து தென்காசியை மாவட்டமாக உருவாக்க பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News