செய்திகள்
முக ஸ்டாலின்

அலங்கார வார்த்தைகள், அறிவிப்புகள் நிறைந்த அணிவகுப்பு பட்ஜெட் - முக ஸ்டாலின்

Published On 2019-07-05 12:53 GMT   |   Update On 2019-07-05 12:53 GMT
அலங்கார வார்த்தைகளும், அறிவிப்புகளும் நிறைந்த அணிவகுப்பாக காட்சியளிக்கிறது பட்ஜெட் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் அலங்கார வார்த்தைகளும், அறிவிப்புகளும் நிறைந்த அணிவகுப்பாக காட்சியளிக்கிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

மத்திய பட்ஜெட், ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு கசப்பையும், கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கியிருக்கிறது. மத்திய பட்ஜெட்டில்  மாநிலங்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் பிரதிபலிக்கவில்லை.



அலங்கார வார்த்தைகளும் அறிவிப்புகளும் நிறைந்த அணிவகுப்பாக பட்ஜெட் காட்சியளிக்கிறது. மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும் மானியத்தையும் பறிக்கும் முழக்கமே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.

இந்த பட்ஜெட் காதுக்கு விருந்தே தவிர, கண்ணுக்கு விருந்தளிக்கவில்லை. தமிழகத்துக்கென்று எந்த பிரத்யேக திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை  என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News