செய்திகள்
மழை

கொடைக்கானல் மலை கிராமங்களில் சாரல் மழை- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2019-07-05 12:18 GMT   |   Update On 2019-07-05 12:18 GMT
கொடைக்கானல் மலை கிராமங்களில் சாரல் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொடைக்கானல்:

தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. பருவ மழை சரியாக பெய்யாததால் கடும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தென் மேற்கு பருவ மழை பெய்தால் மட்டுமே குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை உள்ளது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக கேரளாவில் தென் மேற்கு பருவ மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. கடந்த 3 நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் பகுதியிலும் சாரல் மழை பெய்து வருகிறது.

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பெருமாள்மலை, பேத்துப்பாறை, அடுக்கம், பண்ணைக்காடு போன்ற பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை பொழிந்தது, இப்பகுதிகளில் முக்கிய தொழிலான விவசாயத்திற்கு ஏதுவாக இந்த சாரல் மழை இருக்கும் என மலைவாழ் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் இப்பகுதிகளில் காபி,வாழை, ஆரஞ்சு, பலா மற்றும் மலை காய்கறிகள் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொடைக்கானலில் இன்னும் சிலநாட்களில் ,மழை பெய்யாவிடில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது. மழை பொழியும் நாட்களான இந்த மாதத்தில் கன மழையை எதிர்பார்த்து கொடைக்கானல் மலைக்கிராம விவசாயிகளும் பொதுமக்களும் காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News