செய்திகள்
மழை வேண்டி வழிபாடு நடத்திய கிராம மக்கள்

அரூர் அருகே மழை வேண்டி ஏரியில் வழிபாடு

Published On 2019-07-04 16:26 GMT   |   Update On 2019-07-04 16:26 GMT
அரூர் அருகே கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் மழை வேண்டி ஏரியில் வழிபட்டனர்.
அரூர்:

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்துள்ளது உடையானூர். தற்போது நிலவும் கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதியடைகின்றனர். 

இதையடுத்து, கடந்த மூன்று நாட்களாக, இங்குள்ள ஏரியில் இரவில் பெண்கள் ஒப்பாரிவைத்து வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சியின் இறுதி நாள் ஏரியில் களி, கருவாட்டு குழம்பு வைத்து படைக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், கிராம மக்கள் பங்கேற்று வழிபட்டனர். இறுதியில் மக்களுக்கு களி, கருவாட்டு குழம்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இவ்வாறு, செய்தால் மழைபெய்யும் என்பது ஐதீகம் என பொதுமக்கள் கூறினர்.
Tags:    

Similar News