செய்திகள்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் தங்கத்தேர் இழுத்த காட்சி.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆராய வேண்டும்- தமிழிசை

Published On 2019-07-04 09:26 GMT   |   Update On 2019-07-04 09:26 GMT
மற்ற மாநிலங்களில் ஏற்றுக் கொள்ளும் ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளாதது ஏன் என்பதை ஆராய வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
திருவொற்றியூர்:

திருவொற்றியூரில் பா.ஜ.க. கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை பா.ஜ.க. கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வடிவுடையம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்தார்.

இரண்டாம் முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதை மாவட்ட செயலாளர் ஜெய்கனேஷ் தலைமையில் தங்க தேரை வடம்பிடித்து இழுத்து சிறப்பு பூஜைகள் செய்தார்.

பின்னர் ஏழை எளிய மக்களுக்கு சமபந்தி உணவு வழங்கி நல திட்டங்களை வழங்கினார்.

இதனையடுத்து மரக்கன்றை நட்ட தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜூலை 6-ம் தேதி முதல் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை ஆரம்பிப்பதற்கு அச்சிடப்பட்ட முதல் படிவத்தை வடிவுடையம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்தோம். ஒரு வாக்குச்சாவடிக்கு 5 மரங்களை நட வேண்டும் என பா.ஜ.க. தொண்டர்களுக்கு பிரதமர் மோடி கட்டளையிட்டுள்ளார். அதன்படி திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட சன்னதி தெருவில் மரக்கன்று நடப்பட்டது.

வருகின்ற 6-ந்தேதி சென்னையில் மிக பிரமாண்டமான உறுப்பினர் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்ட உள்ளது. தேர்தலில் பா.ஜ.க. கிடைத்த பின்னடைவு தற்காலிக பின்னடைவு தான். வரும் காலத்தில் பா.ஜ.க. தமிழகத்தில் பெரும் சக்தியாக திகழும் சட்டமன்ற உறுப்பினர்களை அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு துறையிலும் இருக்கும் முக்கியமான நபர்களை கண்டறிந்து கட்சியில் சேர்த்து பிரமாண்டமான இயக்கமாக தொடங்கப்படும். ஜல் சக்தி ஜன் சக்தி என்ற அமைப்பின் மூலம் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற திட்டத்தை பா.ஜ.க .முன்னிறுத்தி வருகிறது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு பிராந்திய மொழிகளில் வெளியிடுவோம் என்று கூறியது வரவேற்கத்தக்கது. மாநில அந்தஸ்த்தில் தமிழில் முதல் அறிவிப்பில் இருக்க வேண்டும் என வலியுறுத்துவோம். முதல் பட்டியலில் தமிழ் இருக்க வேண்டும். மக்களுக்கு எதிரானதாக இருக்கும் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்களில் ஏற்றுக் கொள்ளும் ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளாதது ஏன் என்பதை ஆராய வேண்டும். வராத நோயைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் தவிர வந்த நோயை போக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. ஒரு கட்சியின் தலைவராக இருப்பதற்கு தகுதி இல்லாதவரை பிரதமராக அறிவித்த ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News