செய்திகள்
சென்னை உயர்நீதிமன்றம்

ஸ்டாலின் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை

Published On 2019-07-04 07:27 GMT   |   Update On 2019-07-04 07:27 GMT
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை:

சோழிங்கநல்லூரில் கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி நடந்த திருமண விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் குறித்து பேசினார். இருவரைப் பற்றியும் அவதூறாக பேசியதாக ஸ்டாலின் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில்  அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஸ்டாலின் நாளை ஆஜராகவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.



இந்நிலையில், ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கிற்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார். முதலமைச்சர் குறித்து பேசியதற்காக அரசு வழக்கறிஞர் வழக்கு தொடர முடியாது என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம், மு.க.ஸ்டாலின் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. 
Tags:    

Similar News