செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Published On 2019-06-27 08:02 GMT   |   Update On 2019-06-27 08:02 GMT
தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்டுவதற்காக மத்திய அரசிடம் ஓஎன்ஜிசி மற்றும் ஸ்டெர்லைட் நிறுவனங்கள் அனுமதி கேட்டிருப்பது கவலைக்குரியது, கண்டிக்கத்தக்கது. அதேபோல் உண்மையான ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மத்திய அரசு தயாராக இல்லை என்பது வேதனை அளிக்கிறது.  

ஒருபுறம் விவசாயிகளின் நலனுக்கான திட்டங்கள் என கூறிக்கொண்டு, மறுபுறம் தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுப்பது கண்டனத்திற்குரியது.



தமிழகத்தில் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைத்து வேளாண்மையை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக்கட்டிவிட மத்திய பா.ஜ.க அரசு முடிவு செய்து விட்டதா? என்ற அச்சம் தமிழக விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மக்கள் மற்றும் விவசாயிகளை போற்றி நாட்டின் நலனை வளர்த்தெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News