செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

Published On 2019-06-26 03:01 GMT   |   Update On 2019-06-26 03:01 GMT
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக தொடர்ந்து 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் பரவலாக கடந்த வாரம் இருந்த அளவு இல்லாமல் தற்போது வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளது. அத்துடன் ஆங்காங்கே மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால் தற்போது காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக தொடர்ந்து 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், கடலூர், நீலகிரி, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இந்த மழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது.



சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 24 மணி நேரத்துக்கு வெப்பநிலையை பொறுத்தவரையில் 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியசுமாக இருக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News